search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஆசிரியர் விருது"

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று விருதுகளை வழங்கினார். #NationalTeachersAwards
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


    இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #NationalTeachersAwards
    தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. #AwardsForTeachers
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில், விருதுக்குரியவர்களை மத்திய அரசு தேர்வு செய்து விருதுகளை அறிவிக்கும். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-தேதி தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் இந்த விருதுகளை வழங்குவார்.

    அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நல்லாசிரியர் தேர்வில் மத்திய அரசு கடும் விதிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி, மாநில அரசுகள் நல்லாசிரியர்களை தேர்வு செய்ய முடியாது. ஆசிரியர்களே நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.



    அதன்படி இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருதுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் 6 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சதி மட்டும் விருதுக்கு தேர்வாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆசிரியை சதி, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிகிறார். #AwardsForTeachers
    ×